தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கை! - அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கை

சென்னை: கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவற்றை அரசியல் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

unorganized
unorganized

By

Published : Mar 6, 2021, 6:45 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரைவத் தேர்தல் நடைபெற் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வாக்குகளை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்து வருகின்றன.

இந்நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை அக்கூட்டமைப்பு சார்பில வெளியிடப்பட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலத்துறை வாரியங்களை பாதுகாத்தல், மேம்படுத்துதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஜிஎஸ்டியில் 1 சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும். கேரளாவைப் போல நலவாரிய உறுப்பினர் அட்டை - பணப் பலன்களை தொழிற்சங்கங்கள் வாயிலாக வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான விபத்து உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும். கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர்கள் முறை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, தொழிற்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தெருமுனை விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details