தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110இன் கீழ் பள்ளிக் கல்வித்துறையில் புதிய அறிவிப்பை வெளியிட்டு தனது பேச்சைத் தொடங்கினார். அதில், இந்த உலகத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்விதான். ஒருவனுக்கு அழிவில்லாத பெருஞ்செல்வமும் கல்விதான். எனவே, தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் தரமான கல்வியைப் பெறும் வகையில் சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சிசிடிவி -முதலமைச்சர் அறிவிப்பு - school education
சென்னை: மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 21,71,00,000 செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, நடப்பாண்டில் 124 கூடுதல் வகுப்பறைகள், 83 அறிவியல் ஆய்வகங்கள், 85 நூலக அறைகள், 84 கலை, கைவினை அறைகள், 50 கணினி அறைகள், 92 மாணவர் கழிப்பறைகள், 104 மாணவியர் கழிப்பறைகளை புதிதாக கட்டுதல், 1,475 மாணவர் கழிப்பறைகளை், 1,849 மாணவியர் கழிப்பறைகளை் பழுது பார்த்தல், 149 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், 1,649 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறைகள் உள்ளிட்டவற்றிற்கு 163 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு 61 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 2,650 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 244 அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பள்ளி ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 21 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைக்கப்படும். மேலும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் காலணிகளுக்குப் பதிலாக,2020-21ஆம் கல்வியாண்டு முதல் ஷூ, சாக்ஸ் 10 கோடியே 2 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும். இதனால் 28 லட்சத்து 64 ஆயிரத்து 885 மாணவ, மாணவியர் பயன்பெறுவர் என குறிப்பிட்டார்.