இந்திய அளவில் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(TNCA) 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெருமை மிக்க இந்த சங்கத்தின் தலைவர், உதவி செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
தலைவர் பதவியை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத் தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.