தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்த அசோக் லேலண்ட் - அதிர்ச்சியில் ஊழியர்கள்!

சென்னை: அசோக் லேலண்ட் நிறுவனம் வரும் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது.

Ashok Leyland

By

Published : Sep 6, 2019, 8:21 PM IST

பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும்சரிவை சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் தொழில், வாகன உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தும், அவ்வப்போது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியும் வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு (செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி)வரை, ஐந்து நாட்கள் காட்டாய விடுமுறை விடப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவன அறிவிப்பு

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வணிக வாகன விற்பனை சந்தையில் ஏற்படும் தொடர் சரிவால் வரும் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான சில நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவிக்கிறோம். 6,7,10,11 ஆகிய வேலையில்லா நாட்களின் ஊதியம் வழங்குவதைப் பற்றி அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கத்துடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யும்.

6ஆவது வேலை நாளான 9ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதால், அந்த நாளில் வழங்கப்படும் ஊதியம் செப்படம்பர் மாதம் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். மேலும், சில முக்கிய துறைகள் மட்டுமே இயங்கும். அதற்கு ஆட்கள் தேவைப்பட்டால் துறை அலுவலர்கள் அதனை ஊழியர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்" என தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனை மற்றும் ஏற்றுமதியில், சுமார் 70 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details