சென்னை மதுரவாயல் அருகேயுள்ள துண்டலம் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி (48). இவரது மகள் அஸ்வினி (21), நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தனது பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.
இதனால் பதறிப்போன பெற்றோர், வீட்டின் அருகே உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், அஸ்வினி தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.