சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்சிக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பாக எங்களின் இதயம் கனிந்த முழு ஆதரவைத் தருகிறோம்.