தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்களை தேடி மருத்துவம்... நேற்றுவரை பயனடைந்தோர் 13,247 பேர்' - Makkalai Thedi Maruthuvam Scheme

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்றுவரை 13 ஆயிரத்து 247 பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நேற்றுவரை பயனடைந்தோர் 13,247 பேர்'
'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நேற்றுவரை பயனடைந்தோர் 13,247 பேர்'

By

Published : Aug 7, 2021, 11:34 AM IST

Updated : Aug 7, 2021, 1:04 PM IST

சென்னை: இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை, "ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதிகபட்சம் பயனடைந்த மாவட்டங்கள் தி.மலை, கோவை

குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவமனைகளிலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு, சர்க்கரை நோய், புற்றுநோய், காச நோய், சிறுநீரக சிகிச்சை, முடக்குவாதம், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாட வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நேற்றுவரை பயனடைந்தோர் 13,247 பேர்'

அதன்படி மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்றுவரை 13 ஆயிரத்து 247 பேர் பயனடைந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 22 நபர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 969 நபர்களும் பயனடைந்துள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை 753 பேர் பயனடைந்துள்ளனர், வரும் நாள்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மக்களை தேடி மருத்துவம் - ஒரு கோடி இலக்கு: ஸ்டாலின் உறுதி

Last Updated : Aug 7, 2021, 1:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details