சென்னை: இன்று சட்டப்பேரவையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இரங்கல் குறிப்பு மற்றும் இரங்கல் தீர்மானம் வாசித்த பிறகு பேரவை நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டு நடப்பு தெரியாதவர் அன்புமணி ராமதாஸ்: அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்! - அதிமுக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம்
நாட்டு நடப்பு தெரியாதவர் அன்புமணி ராமதாஸ் என புவனகிரி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேட்டியளித்த கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், "நெய்வேலி என்.எல்.சி நில விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ரமதாஸ் தவறான கருத்துகளை மேடையில் பேசிவருகிறார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பலமுறை இந்த பிரச்னைகளை வலியுறுத்திப் பேசியுள்ளார். அதிமுக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக போராடவில்லை எனக்கூறுவது கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு எல்லைக்குள் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா? - நீதிமன்றம் கேள்வி