தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம்! - ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கால அவகாசம் நீட்டிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய, மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

By

Published : Jun 7, 2022, 8:00 PM IST

சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜூன் 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட 160 நபர்களிடம் விசாரணையை நடத்தியது. ஜூன் 24ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு கூறியிருந்தது. இந்தநிலையில் ஜூலை வரை கால நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆணையத்திற்கு கடந்த ஜனவரி மாதம் மேலும் 5 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆணையம் தற்போது 13ஆவது முறையாக கால அவகாசம் கோரியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் திருப்பம்..! செக் நேருவுக்கா? மகனுக்கா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details