தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம்: 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை!

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரை கைது செய்வதற்காக 7 டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படை அமைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம்: 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை!
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம்: 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை!

By

Published : Jun 2, 2022, 3:30 PM IST

சென்னை: ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கூறி மோசடி செய்ததாக, கடந்த 24ஆம் தேதி ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்டு நிறுவனத்துடன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநரான பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஆறு மோசடி நிறுவன இயக்குநர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனை தீவிரப்படுத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். இவர்கள் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமறைவாகவுள்ள இயக்குநர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:கவர்ச்சி விளம்பரம்; ஆருத்ரா கோல்ட் கம்பெனியில் சோதனை: ரூ.3.5 கோடி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details