தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு - கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மதிப்பெண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

arts-and-science-college-cut-off-mark-change

By

Published : Apr 21, 2019, 10:49 AM IST

Updated : Apr 21, 2019, 11:08 AM IST

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2019-2020ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ளார்.

அதில் "தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்குப் பிளஸ் டூ மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும்.

அரசு உதவி பெறும் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், தரவரிசைப் பட்டியலை அந்தப் பாடப் பிரிவிற்கு ஏற்ப 400 மதிப்பெண்களுக்குத் தயார் செய்ய வேண்டும்.

2018-2019ஆம் கல்வி ஆண்டிற்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு 800 மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்பட்டு, அது 400 மதிப்பெண்களாக மாற்றம் செய்து தர வரிசை பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

மேலும் கணக்கு, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் பாடப்பிரிவுகளில் சேர கட்டாயம் கணக்கு பாடம் படித்து இருக்க வேண்டும். வேதியியல் ,தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல் பாடப்பிரிவுகளில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

எலக்ட்ரானிக் அடிப்படையான பாடப்பிரிவுகளில் சேர இயற்பியல், கணக்கு பாடம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் பெறப்படும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 21, 2019, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details