தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐசரி கணேஷ், அனந்தராமனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - isari ganesh

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  ஜூலை 29ஆம் தேதி நேரில் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்ய ஐசரி கணேஷ், அனந்தராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐசரி கணேஷ்

By

Published : Jul 22, 2019, 1:12 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஜூன் 22இல் விசாரித்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென பொதுச்செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேஸும், அனந்தராமனும் நீதிபதியை அணுகியுள்ளனர்.

இதுதொடர்பாக, இவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம். நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ், அனந்தராமன் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினர்.

அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அன்றைய தினம் இருவரும் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details