தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபரிடம் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி தருவதாக கூறி 2 கோடி வரை சுருட்டிய நபர் கைது!! - சென்னை குற்றச் செய்தி

பிரபல தொழிலதிபரிடம் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாற்றியவர் நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 5, 2023, 4:23 PM IST

Updated : Aug 5, 2023, 4:36 PM IST

சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்தவர் அனீஸ் ராஜா(47), தொழிலதிபரான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சன்லைட் என்ற நிறுவனத்தை தொடங்கி சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ, தீவுத்திடல் என பல்வேறு இடங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், தன்னை நம்ப வைத்து சுமார் 1.88 கோடி ரூபாயை ஏமாற்றிய நபர் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொழில் நடத்தி வரும் அனீஸ் ராஜாவை கடந்த 2017ஆம் ஆண்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பட்டாசு வியாபாரம் செய்த போது பம்மல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர் தான் ரேடியோ சிட்டியில் வேலை பார்த்து வருவதாகவும், தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தன்னிடம் நிறைய கம்பெனிகள் விளம்பர ஆர்டர்கள் தருவதால் போதிய பணம் இல்லாததாலும் நீங்கள் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய அனீஸ் ராஜா புதியதாக மந்த்ரா மீடியா என்கிற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். பல முன்னணி நிறுவனங்களில் விளம்பரத்திற்காக விஜயராகவன் வங்கி கணக்கிற்கு 2018ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை சுமார் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார்.

மேலும் ரொக்கமாக 56 லட்ச ரூபாய் பணத்தை பல தவணைகளாக விஜயராகவனும் அவரது மனைவி தீபாவும் அனீஸ் ராஜாவிடம் வாங்கி சென்றுள்ளனர். சுமார் 2 கோடியே 21 லட்சம் இதுவரை விஜயராகவனும் அவரது மனைவியும் அனிஸ் ராஜாவிடம் வாங்கி உள்ள நிலையில் 33 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை கேட்டபோது பல நிறுவனங்களில் இருந்து பணம் வரவில்லை என்றும், மிகப்பெரிய கம்பெனிகள் என்பதால் அவர்களிடம் பணம் கேட்டால் விளம்பரம் தர மாட்டார்கள் என விஜயராகவன் கூறியுள்ளார்.

இதை நம்பிய அனீஸ் ராஜா அமைதியாக செல்லவே நாளுக்கு நாள் வீட்டின் தேவைக்காக நகைகள் வாங்க வேண்டுமென கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என அனீஸ் ராஜா கேட்டுள்ளார். ஆனால் தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் நகைக் கடைகளில் பெயர்களை கூறி அங்கு சென்று நகைகளை வாங்கிக் கொள்ள வேண்டி விஜயராகவன் 74 லட்சம் ரூபாய்க்கு பர்சேஸ் வவுச்சர் அளித்துள்ளார். ஆனால் அங்கு சென்றால் அது இரண்டும் போலியானவை என தெரிவித்துள்ளனர்.

அந்த வவுச்சரை சரி பார்ப்பதற்கு சந்தோஷ் என்பவருக்கு 80 ஆயிரம் ரூபாய் ஜிபேவில் அனுப்ப வேண்டும் எனவும் கூறி அதையும் இரண்டு தவணையாக வாங்கிக் கொண்டுள்ளார். இதற்கிடையில் விஜயராகவன் சகோதரி என அறிமுகம் செய்து கொண்ட பெண் ஒருவர் மற்றொரு எண்ணில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நீங்கள் இதே கடைக்கு சென்று நகைகளை வாங்கி கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதை செய்த அனீஸ் ராஜா தனக்கு பணம் வரவில்லை என்பதால் மீண்டும் விஜயராகவன் இடமே முறையிட்டுள்ளார். புதியதாக வீடியம் கம்பெனியிலிருந்து பணம் வர உள்ளதாகவும் அதற்காக REQUEST மெயில் அனுப்பும்படி தெரிவித்ததன் அடிப்படையில் மெயில் அனுப்பிய உடன் பணம் வந்து விடும் என்கிற REPLAY வந்துள்ளது. ஆனால் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனீஸ் ராஜா இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

புகாரில் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏமாற்றப்பட்டது உண்மை என தெரியவரவே குற்றத்தில் ஈடுபட்ட விஜயராகவன், அவரது மனைவி தீபா, சந்தோஷ் குமார், சுகன்யா, மற்றும் விஜயராகவனின் தங்கை அவரது கூட்டாளிகள் அனைவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விஜயராகவனை கைது செய்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். மார்க்கெட்டிங் தொழில் செய்வதாக கூறி விளம்பரங்களை பிடிப்பதற்காக தொழிலதிபர்களை ஏமாற்றிய நபர் சென்னையில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நாளை கலைஞர் பன்னாட்டு மராத்தான்: வீரர்களே தயாரா!.....

Last Updated : Aug 5, 2023, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details