சென்னை ராமபுரத்தைச் சேர்ந்த கி. வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் நிறுவனராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் இவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச காணொலிகள் வந்துள்ளன.
இது தொடர்பாக அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஆபாச காணொலி அனுப்பிய நபரை உடனடியாக மூன்று நாள்களில் கைதுசெய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அந்நபரைத் தானே கண்டுபிடித்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கி. வீரலட்சுமி காணொலி பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காததால் சென்னை விமான நிலையம் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி காணொலி அனுப்பியவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.