சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து சென்ற தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் காவல்துறையினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை டிஜிபி திரிபாதி விதித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ''குற்றவாளிகளின் சிறை தண்டனை குறைந்தபட்சம் ஏழு வருடங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து கைது செய்ய வேண்டிய அவசியத்தை எழுத்து மூலம் பதிவுசெய்து சம்மந்தப்பட்ட காவல் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.