தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி 500 கிலோ நகைகளை மோசடி செய்த கும்பல் கைது! - தமிழ் குற்ற செய்திகள்

சென்னை: வட்டியில்லா கடன் வழங்குவதாக இஸ்லாமியர்களை குறிவைத்து 500 கிலோ நகைகள் வரை மோசடி செய்த ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

arrest-of-gang-who-targeted-islamists-and-swindled-500-kg-of-jewelery
arrest-of-gang-who-targeted-islamists-and-swindled-500-kg-of-jewelery

By

Published : Jan 26, 2021, 12:12 PM IST

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் இயங்கி வரக்கூடிய ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம் இஸ்லாமியர்களுக்கு வட்டி இல்லாமல் நகைக் கடன் வழங்குவதாகக் கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை அக்கடையில் அடகு வைத்தனர்.

இந்நிலையில் திடீரென்று ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனம் தங்களது கடையை மூடிவிட்டு சுமார் 500 கிலோ நகையையுடன் தலைமறைவாகினர். அடகு வைத்த இஸ்லாமியர்கள் பலர் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பெற்ற தங்க நகையை வங்கிகள், தனியார் நிறுவனத்தில் மீண்டும் அடகு வைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

மேலும் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து நகைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசூர் ரகுமான், ஊழியர்களான ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி இன்சூரன்ஸ் மூலம் கோடி கணக்கில் மோசடி: பெண் உட்பட 6 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details