ஐஆர்சிடிசி செயலி (App) மற்றும் இணையதளத்தில் ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இதில், அனைவருக்கும் பரவலான வாய்ப்பு கிடைக்கும் வகையில், டிக்கெட் முகவர்கள் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஆனால், விதிகளை மீறி அதிக அளவிலான டிக்கெட்களை முன்பதிவு செய்த வேலூரைச் சேர்ந்த முகவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் பல்வேறு பெயர்களில், சட்டவிரோத மென்பொருட்களைப் பயன்படுத்தி தானாக ரயில் முன்பதிவு படிவத்தை நிரப்பி அதிக அளவிலான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரிடமிருந்து 7,034 ரூபாய் மதிப்பிலான இணையதள செல்லுபடியாகும் தட்கல் டிக்கெட்கள் 1 லட்சத்து 68 ஆயிரத்து 930 ரூபாய் மதிப்பிலான காலாவதியான டிக்கெட்கள் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 964 மதிப்பிலான டிக்கெட்கள், கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனரின் கீழ் துணை ஏஜென்டாக செயல்பட்ட நபரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரது செல்போனில் பல்வேறு சட்டவிரோத செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம் - தேடும் பணி தீவிரம்