சென்னைப் பல்கலைக்கழகம் 1980-1981 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவித்திருந்தது. அதில் தொலைதூரக் கல்வி படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதினர்.
இந்த விவகாரம் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்கள் கொடுக்கும் நேரத்தில் தெரியவந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பாக தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்தபோது, அவர்களின் பெயர்கள் இல்லாததால் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.