தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 75 படுக்கைகள் தயார்

விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேரை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க 75 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 55 பேரை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு - ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 75 படுக்கைகள் தயார்!
விபத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 55 பேரை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு - ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 75 படுக்கைகள் தயார்!

By

Published : Jun 3, 2023, 1:57 PM IST

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே நேற்று (ஜுன் 2) பயங்கர விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாஹனாக நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தடம் புரண்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஏற்கனவே தடம் புரண்டு கிடந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரயிலிலும் என மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

மேலும், விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்ஸ் அப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 லட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீட்புப் பணிகளை பார்வையிட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசு உயர் அதிகாரிகள் பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட 5 அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புவனேஸ்வர் புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:Ashwini Vaishnaw: ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெறும் - ரயில்வே அமைச்சர்

இந்த விபத்தில் தற்போது வரை உயிரிழப்பின் எண்ணிக்கை 261ஆக அதிகரித்துள்ளது என தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை நோக்கி 55 பயணிகள் வந்ததாக தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேரை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் விமானத்தில் அழைத்து வந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உள்ளனர். இதனால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 75 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மீட்புப் பணிகளை பார்வையிட ஒடிசா சென்றது தமிழ்நாடு குழு

ABOUT THE AUTHOR

...view details