தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?' - அற்புதம் அம்மாள் கேள்வி

சென்னை: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது எனப் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

sdafas
fsdafa

By

Published : Apr 5, 2021, 11:16 AM IST

Updated : Apr 5, 2021, 12:01 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்தது. ஆனால், எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவின் விடுதலை கோரும் 161 மனு மீது முடிவெடுக்க எம்.டி.எம்.ஏவின் (பல்நோக்கு கண்காணிப்புக் குழு) இறுதி அறிக்கைக்குக் காத்திருக்கிறார் ஆளுநர்னு நீதிமன்றத்தில் சொன்னது தமிழ்நாடு அரசு.

அற்புதம் அம்மாள் ட்வீட்

ஆளுநரின் அக்கடித நகல் கோரி தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீடு இன்று மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருது. இன்று தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Apr 5, 2021, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details