நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு ரோந்து வாகனங்கள் நிவாரணப் பொருள்களுடன் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தயார் நிலையில் உள்ளதாக கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியிலும் ரோந்துக் கப்பல்கள் பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய ராணுவப் படையினரும் நிவர் புயல் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.