தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புல்லட்டிலிருந்து கீழே விழுந்த ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு - armed policeman died in chennai

கிண்டி அருகே புல்லட் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஆயுதப்படை காவலர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஆயுதப்படை காவலர்
ஆயுதப்படை காவலர்

By

Published : Dec 27, 2021, 11:44 AM IST

சேலம் மாவட்டம் கொழிஞ்சிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் வேளச்சேரியில் தங்கி பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் கண்ணன் பணிக்குச் செல்வற்காக நேற்று (டிசம்பர் 26) தனது புல்லட் பைக்கில் வேளச்சேரியிலிருந்து, கிண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

வனத் துறை அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணனை அங்கிருந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிய உதவிஆய்வாளர்; காணொலி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details