தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் சம்பவம்: பேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்ட ஆயுதப்படைக் காவலர் பணியிடை நீக்கம்! - Armed Forces Police

சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆயுதப்படை காவலர்  ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்  காவலர் முகநூல் பதிவு  லாக் அப் டெத் காவலர்  Armed Forces Police  suspend for controversial fb post
சாத்தான்குளம் சம்பவம்: பேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்ட ஆயுதப்படைக் காவலர் பணியிடை நீக்கம்

By

Published : Jun 28, 2020, 7:46 PM IST

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அப்பதிவானது காவல் துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இப்பதிவிற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்தச்சூழ்நிலையில், தனது பேஸ்புக் கணக்கு எண், அதன் இரகசிய குறியீடு(Password) ஆகியவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டுள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு, காவல் துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்திய காரணத்திற்காக காவலர் சதீஷ் முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .மேலும், இது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கிலும் அடங்காத புள்ளிங்கோ: மூன்று சக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் வழிப்பறி!

ABOUT THE AUTHOR

...view details