நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜூனமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சியை விரைவில் தொடங்க போகிறேன். மாற்று சிந்தனை தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது. ஒரு நேர்மையான அரசியல் கட்சி உருவாக்க இருக்கிறோம்" என்றார்.
ரஜினி ரசிகர்களை மையப்படுத்தி தான் இந்த அரசியல் தொடக்கமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஜினி தெளிவாக கூறினார். மீண்டும் அவரை வலியுறுத்த கூடாது. அவரிடம் கற்றுக்கொள்ளலாம். ரஜினியின் டூப்பாக இருக்க முடியாது. இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் யார் சரியானவர் என்ற கேள்வி தொடர்ச்சியாக இருந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி நிச்சயம் வரும்.