தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதம் மாறியவர்களுக்கு பழைய ஜாதியின் பெயரில் சான்றுகள் வழங்குவது சட்டவிரோதம் - அர்ஜுன் சம்பத்! - மதம் மாறியவர்களுக்கு பழைய ஜாதியின் பெயரில் சான்றுகள் வழங்குவது சட்டவிரோதம் - அர்ஜுன் சம்பத்

சென்னை: மதம் மாறியவர்களுக்கு பழைய ஜாதியின் பெயரில் சான்றுகள் வழங்குவது சட்டவிரோதம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

Arjun sampath says  It is illegal for converts to give certificates in the name of the old caste
மதம் மாறியவர்களுக்கு பழைய ஜாதியின் பெயரில் சான்றுகள் வழங்குவது சட்டவிரோதம் - அர்ஜுன் சம்பத்

By

Published : Mar 11, 2020, 12:51 PM IST

Updated : Mar 11, 2020, 1:39 PM IST

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசியபோது,

'தமிழ்நாட்டில் இந்துகளாக இருந்து மதம் மாறியவர்களுக்கு பழைய ஜாதியின் பெயரில் சான்றுகள் வழங்குவது சட்டவிரோதமானது. மதம் மாறி கிறிஸ்துவ நாடார், கிறிஸ்துவ வன்னியன் என சான்றுகளை பெற்று இரட்டைச் சலுகைகளைப் பெற்று வருகின்றனர். இது மோசடி ஆகும். இது போன்ற ஜாதி சான்றுகளை தருவதை அரசு தடை செய்யவேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கோவையில் இந்து முன்னணி தலைவர் தாக்கப்பட்டு உள்ளார். இந்து முன்னணிஅலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அமைப்புகளுடன் கம்யூனிஸ்டு, திமுக ஆகிய கட்சியினர் இணைந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை தந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுப் பழக்கம், சுத்தமாக இருக்க வேண்டும். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து சித்த வைத்தியத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் தடுப்பு முகாங்களில் சித்த வைத்தியர்களையும் பயன்படுத்த வேண்டும்.

ரஜினிகாந்த்-திருநாவுக்கரசர் நண்பர்கள். ஆன்மீக அரசியல் அனைவரையும் அரவணைக்க கூடியது. லஞ்ச, ஊழல் ஆகியவற்றுக்கு ஆளானவர்களுடன் ரஜினி இருக்க மாட்டார். வன்முறை, ஆர்ப்பாட்ட அரசியலில் ரஜினிகாந்த்திற்கு உடன்பாடு கிடையாது. திருநாவுக்கரசர் சந்திப்பு நட்பு ரீதியானதாக இருக்கலாம்' என்றார்.

Last Updated : Mar 11, 2020, 1:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details