தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பரப்புரைகளில் திமுக, அதிமுக போன்ற பெரிய அரசியல் கட்சிகளும், மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி போன்ற வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தலைவர்களின் தேர்தல் பரப்புரைகளை தொலைக்காட்சியில் பார்த்து ஆத்திரமடையும் கமல், அதனை உடைத்துவிட்டு மக்களிடம் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்னைகளை முதன்மைப்படுத்தி உங்கள் வாக்கு யாருக்கு என கேள்வி எழுப்பியுள்ள கமல், ஏப்ரல் 18 யாருக்கு ஓட்டு போடப்போறீங்க? என சிந்திக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிவரும் பரப்புரை வியூகங்களில், தற்போது தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கமல் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் #கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்.
நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்.
ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்.
அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்.
புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்.