சென்னை:மேஷ ராசிக்காரர்களே, இந்த ஆண்டு மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில், வியாழன் உங்கள் ராசியிலும், சனிபகவான் பதினொன்றாம் வீட்டிலும் இருக்கிறார்கள். எனவே உங்கள் வருமானம் நன்றாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சரியான தேர்வுகளை மேற்கொள்வது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
நாளுக்கு நாள் வருமானமும் அதிகரிக்கும். இருப்பினும் எதிலும் அதிநம்பிக்கையுடன் கண்மூடித் தனமாகச் செயல்படாதீர்கள், கவனமாக இருக்க வேண்டும். பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும் ராகு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், அரசாங்கம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.