சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோமத். ஒலா நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றும் இவர், நேற்றிரவு காரில் கீழ்பாக்கம் அருகே வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கோமத் ஓட்டி வந்த காரை வழிமறித்து சோதனையிட்ட போது, அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினருடன் வாக்குவாதம்: தற்கொலைக்கு முயன்ற டிரைவர்! - தற்கொலைக்கு முயற்சி
சென்னை: காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட ஒலா நிறுவன கார் ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கம் காவல்நிலையம்
இதனால்ஆத்திரமடைந்த கோமத், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவரது நண்பர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.