தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தள்ளுவண்டிக் கடைகளை அப்புறப்படுத்திய காவல் துறை: வாக்குவாதத்தில் வியாபாரிகள்! - பூக்கடை காவல் நிலையம்

சென்னை: பூக்கடை காவல் நிலையம் அருகே சாலையில் போடப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடைகளை அப்புறப்படுத்திய காவல் துறையினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் வியாபாரிகள்
வாக்குவாதத்தில் வியாபாரிகள்

By

Published : May 27, 2020, 11:53 PM IST

கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டுவந்துள்ளது. அதனடிப்படையில் சென்னை மீண்டும் படிப்படியாக பழைய நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இதனால் மக்கள் நடமாட்டத்தைக் கண்ட சாலையோர வியாபாரிகள் சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இன்று காலை தள்ளுவண்டிகளில் பழக்கடைகளைப் போட்டுள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியபோது வியாபாரிகளிடம் காவல் துறையினர் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த காவேரி என்ற பெண் வியாபாரி, வாயில் ரத்தத்தோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து பூக்கடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பிரசவ வலியால் துடித்த பெண் - உடனடியாக உதவிய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details