சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒரு முக்கியமான தலைவர். குற்றப்பரம்பரை சட்டத்தில் இருந்து மக்களை மீட்டவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் 1996ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை அமைக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை 2014ஆம் ஆண்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவே தேவருக்கு புகழாரம் சூட்ட பசும்பொன்னும் சென்றிருக்கிறார். சென்னையிலும் மரியாதை செலுத்தியிருக்கிறார். அதேபோல்தான் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள ஈபிஎஸ் சென்னையில் மரியாதை செலுத்தி இருக்கிறார்.
திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் வருகிறது. 1989 முதல் 1991 வரை இருந்த இரண்டு வருட காலத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை ஊக்குவித்ததால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக அரசாங்கம் திறமை இல்லாத அரசாங்கமாக செயல்படுகிறது.
முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல், சம்பவம் நடந்து முடிந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கோவை வெடிகுண்டு சம்பவத்தில் ஆறு இடங்களில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
இல்லையென்றால் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும். இதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு ‘ஒற்றை ஓநாய் முறை’ தாக்குதல் என பெயர் வைத்துள்ளனர். பெயர் வைத்தவர்கள் ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை?
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தலைதூக்கும். ஆனால் இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்வதற்கு திமுக அரசு தவறிவிட்டது. எங்களுடைய ஆட்சியில் வகுப்புவாத பிரச்னை இல்லை. தீவிரவாத பிரச்னை இல்லை. வன்முறை கலாச்சாரங்கள் இல்லை.
துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் இல்லை. ஆனால் தற்போது இது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. மாநில காவல்துறை தூங்கிக் கொண்டிருக்கிறதா? முன்கூட்டியே காவல்துறையினர் கணிக்கத் தவறி விட்டனர். தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை 100% கொடுப்பது அரசின் கடமை. பாதுகாப்பு கொடுக்கத் தவறினால், அதிமுக குரல் கொடுக்க தயங்காது" என்றார்.
இதையும் படிங்க:அண்ணாமலை வதந்திகளை பரப்புகிறார்... காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்... தமிழ்நாடு காவல்துறை...