மார்ச் 1 முதல் இன்று (மே.28) வரை தமிழ்நாட்டில் மிக அதிகமாக கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணியில் 1,057 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று புத்தன் அணையில் 1,027 மி.மீ, சிற்றாறு இரண்டில் 1,008 மி.மீ பதிவாகியுள்ளது. மேலும் கோதையாறு, மாஞ்சோலை ஊத்து ஆகிய தென்பகுதிகளும் அதிக மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் அதிக மழை பெய்யும். கோடைக்காலம், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என மூன்று பருவகாலங்களிலும் அதிக மழையை கன்னியாகுமரி பெறும் சிறப்பைப் பெற்றுள்ளது.
பாபநாசம், தென்காசி, வால்பாறை, நீலகிரி ஆகிய பகுதிகளும் கோடைக் காலத்தில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக கன்னியாகுமரியில் மே மாதத்தில் தொடர்ந்து மழை பெய்யும்.
வரலாறு காணாத மழையை சந்திக்க போகிறதா தமிழ்நாடு?
கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 2021ஆம் ஆண்டைப் பொறுத்தவரை ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் 736 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் 605 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 1,000 மி.மீ தாண்டி மழை பதிவாகியுள்ளது. வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை இப்போது பதிவாகியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.