சென்னை:மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் வசதியாக உள்ளதா? என்பது குறித்து ஈடிவி பாரத்தின் இந்தச் சிறப்புப் பதிவில் காணலாம்.
சென்னை உள்பட மற்ற மாவட்டங்களுக்குச் சென்று வர 25 ஆயிரம் பேருந்துகள், சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள் 3000, மாவட்டத்திற்குள் பயணிக்க 2000 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. மொத்தமாக 30,000 பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது ஓட்டுநர், நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை உபசரிப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டும்.
இந்த அறிவியல் யாருக்காகப் பயன்படுகிறது ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது
மேலும், மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது முறையாகப் பேருந்தை நிறுத்தி ஏற்றுச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இடம் இல்லை என மாற்றுத்திறனாளிகளைப் பேருந்திலிருந்து இறக்கிவிடக் கூடாது, கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் பயணிகள் வேறு யாராவது அமர்ந்திருந்தால் அவர்களை இருக்கையிலிருந்து எழச் செய்து மாற்றுத்திறனாளிகளை அமரவைக்க வேண்டும் என்றும், பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி
இந்திய அரசு அறிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரியத் தேசிய அடையாள அட்டையின் நகல் அட்டை கொண்டு 40 விழுக்காடு மாற்றுத் திறன் மற்றும் அதற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மட்டும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் வசதியாக உள்ளதா மேலும், இவர்கள் இருவருக்கும் உரிய இலவசப் பயணச் சீட்டினை பேருந்து நடத்துநர்கள் வழங்குவதோடு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி 75 விழுக்காடு கட்டணச் சலுகையில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆட்சியில் அதுவும் காணவில்லை
இதனிடையே, மாற்றுத்திறனாளிக்கு ஏற்ற பேருந்து இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம் எனச் சாய் சங்கர் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்) தெரிவித்துள்ளார். மேலும் அவர், பேருந்து பயணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதி இல்லை. கடந்த ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் என்று பேருந்தில் இடம் ஒதுக்கப்பட்டு போர்டு வைக்கப்பட்டது.
இந்த அறிவியல் யாருக்காகப் பயன்படுகிறது ஆனால், தற்போது அதுவும் காணவில்லை, நடத்துநர்கள் மாற்றுத் திறனாளிகளை மதிக்காமல் விசில் அடித்து விடுகிறார்கள். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்துநரிடம், கேட்கும்போது சரியான பதில் சொல்வதில்லை.
தாழ்தளப் பேருந்து இயங்க வேண்டும்
மாற்றுத் திறனாளிகளுக்குப் பேருந்து பயணத்தில் சலுகை இருந்தாலும்கூட, வெளியூர் செல்லும்போது கோயம்பேட்டில் சென்றுதான் டிக்கெட் வாங்க வேண்டும் என்று சொல்வது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளது.
இதனை மாற்றி அமைக்கவும், இதுகுறித்து நடத்துநரிடம் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்காகத் தாழ்தளப் பேருந்து இயங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்த ஆட்சி வந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் பேருந்தில் வசதி உள்ளதா இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து இயங்கி வரும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், "மத்திய, மாநில எந்த ஆட்சி வந்தாலும் கூட மாற்றுத்திறனாளிக்கு என்று வசதியான பேருந்துகள் இல்லை. பேருந்து போக்குவரத்து என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் சவாலாக இந்தப் பேருந்து பயணம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு பேருக்குமான பயணமானது எப்பொழுதுமே சவாலாக உள்ளது. மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி இதற்கான தீர்வுகள் என்பதே எட்டப்படாத ஒன்றாக உள்ளது. கடந்த ஆட்சியில் lift வசதியுடன் பேருந்து இருந்தது, தற்போது அதனைச் சாலைகளில் பார்க்க முடியவில்லை.
இன்னும் நிறைவு பெறவில்லை
தாழ்தள பேருந்து என்பது எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் சிக்கல் உள்ளது. சாமானிய மக்களுக்கும், தவழ்ந்து செல்லும் மாற்றுத் திறனாளிகள், உயரம் குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கும் பயன்படக் கூடிய அளவிற்கு வேண்டும். இதை நோக்கி நகர வேண்டும் என்றால் அதற்குத் தகுந்தாற்போல் சாலைகளும் கட்டமைக்க வேண்டும்.
2007இல் நடைபெற்ற ஐநா மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் தாழ்தள பேருந்துகளில் அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளும் பொதுவானதாக இருக்கவேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் உடன்படிக்கையைக் கையெழுத்திட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் வசதியாக உள்ளதா யுனிவர்சல் டிசைன் கட்டமைப்பு அனைவருக்குமான கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், தற்போது 2022 ஆகிறது, கிட்டத்தட்ட 15 வருடம் கடந்து இன்னும் நிறைவு பெறவில்லை.
இதற்கு நிதி இல்லை என்றால்
தற்போது அது கூட தேவையில்லை, குறைந்த பட்சம் தாழ்தள பேருந்தை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதைக்கூட இன்றைய அரசு செய்யவில்லை எனக் குற்றம் சுமத்தினார். மேலும், இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் போது தமிழ்நாடு அரசு தங்களிடம் நிதி இல்லை என்று சொல்லி உள்ளது.
முதியோர்களுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் வசதியாக உள்ளதா இதற்கு நிதி இல்லை என்றால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த நிதி எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். மாற்றுத்திறனாளிக்கு மட்டும் செலவு செய்ய அரசு காசில்லை என்று சொல்வது, இந்த அரசாங்கம் முக்கியத்துவத்தை மாற்றுத் திறனாளிகளுக்குக் கொடுப்பதில்லை என்றும் மேலும் அந்தப் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் இல்லையோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் வசதியாக உள்ளதா இந்த அறிவியல் யாருக்காகப் பயன்படுகிறது ?
சிங்கப்பூரை உருவாக்கியவரும் சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் லீ குவான் யூ, முதியோர்களுக்கான இயலாமை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான இயலாமையும் கலந்து, அவர்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கையைப் பொறுத்து இது எல்லோருக்குமான தேவையாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 25 முதல் 30 விழுக்காடு மக்களுக்கு இந்த வசதி தேவைப் படுகிறது என்று கணக்கிட்டு அன்றே அதற்கான தாழ்தள பேருந்துக்கான கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர். அதேபோல் ஏசி பேருந்தில் ஒரு பட்டனை அழுத்தினால் ஒரு பக்கமாகச் சாயும் டெக்னாலஜி உள்ளது.
ஆனால், இந்த அறிவியல் யாருக்காகப் பயன்படுகிறது என்பது தேவையாக உள்ளது. எனவே அரசுகள் கொள்முதலைப் பொறுத்தவரை தாழ்தள பேருந்துகள் தான் வாங்க வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை பயக்கும் எண்ணெய் எது தெரியுமா?