தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”கடந்த ஜூலை மாதம் தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பல பணிகளை செய்து முடித்துள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் உள்ளிட்ட ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெறும்.
ஆறாம் கட்ட அகழாய்வில் 3,959 தொல்பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், பிராமி உள்ளிட்ட எழுத்து வடிவங்கள், எடைக் கற்கள், சூதுபவளம், அலுமினிய செங்கல் கட்டுமானங்கள், முதுமக்கள் தாழி, எலும்புக் கூடுகள், நுண் கத்திகள், நாயக்கர்கால தங்க நாணயங்கள், புகைப்பான்கள், நுண்கற்கால ஆயுதங்கள், மேற்கூரை ஓடுகள், இரும்பு உலை, வாய்க்கால் போன்ற கட்டடப்பகுதி, கல்வட்டம் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசிய காணொலி கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மைசூர் கொண்டு செல்லப்பட்டவையும் விரைவில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படும். இதுவரை செய்த 40 அகழாய்வுகளைத் தொகுத்து மீள் உருவாக்கம் செய்ய இருக்கிறோம். 24.81 கோடிக்கு கோட்டைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகப்பட்டினத்தில் உள்ள டச் கோட்டைப் பணிகள் முடிந்து விட்டன. செப்டம்பர் 30க்குள் பணிகள் முடிந்து முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்”என்றார்.
இதையும் படிங்க:ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை மதுரையில் பகுப்பாய தொல்லியல் துறைமுடிவு!