சென்னை: அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் லட்சணம் இது தானா? என அறப்போர் இயக்கம் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி உள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ரூ.750 கோடி பிட் மண் ஊழல் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர் தற்போது திமுக அமைச்சர் ஏ.வ. வேலுவின் சிறப்பு உதவியாளராக உள்ளார். மேலும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ள திமுக அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஜெயசேகர் மற்றும் 1130 அதிகாரிகள் மீது உடனடி துறை நடவடிக்கை வேண்டி அறப்போர் இயக்கம் தலைமைச் செயலர் உள்பட அனைவருக்கும் புகார் அனுப்பி உள்ளது.
இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெற இருக்கும் திமுக அமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஜெயசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் இயக்குநருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க:வேகத்தடை அமைப்பதில் ஊழலா? - ஆர்.டி.ஐ. தகவலால் எழும் குற்றச்சாட்டு