சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அறப்போர் இயக்கத்தினர் பல்வேறு சமூக அவலங்கள், அரசு அமைப்புகளின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவரும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்திற்கு காரணமாக இருக்கும், ஏரி குளங்கள் தூர் வாரப்படமால் இருப்பது, ஆக்கிரமிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது இவர்களின் வழக்கம்.
அறப்போர் இயக்கத்தினர் கைது!
அதன்படி இன்று காலை தரமணி அருகே உள்ள கல்லுகுட்டை ஏரியில் அறப்பொர் இயக்க நீர் மேலாண்மை ஒருங்கினைப்பாளர் ஹரிஸ் சுல்தான் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த தரமணி காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூறிய அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேஷ், சமூக அக்கறையுடன் அரசின் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை மிரட்டும் நோக்கோடு இது போன்ற மிரட்டல் பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.