சென்னை மவுண்ட் ஆயுதப்படை பயிற்சி வளாகத்தில் கடந்த 3ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் 8 பெண் காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி - சென்னை கரோனா தற்போதைய செய்தி
சென்னை: மவுண்ட் ஆயுதப்படை பயிற்சி வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியில் பங்கேற்ற பெண் காவலர்களில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெண் காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 பெண்கள் இரண்டாம் நிலை காவலர் பயிற்சிக்காக இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ள வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்களில் 8 பெண் காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அனைவரையும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்களுடன் பயிற்சி மேற்கொண்ட அனைத்து பெண்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர்.