தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாமன்னன் எனக்குள் 30 ஆண்டுகள் இருந்த ஆதங்கம்' - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!

Maamannan 50th day celebration: மாமன்னன் திரைப்படம் தனக்குள் 30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் தெரிவித்துள்ளார்.

மாமன்னன் வெற்றி விழாவில் ஏ ஆர் ரஹ்மான் பேச்சு
மாமன்னன் வெற்றி விழாவில் ஏ ஆர் ரஹ்மான் பேச்சு

By

Published : Aug 17, 2023, 10:12 PM IST

Updated : Aug 17, 2023, 11:01 PM IST

மாமன்னன் 50வது நாள் வெற்றி விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீர்த்தி சுரேஷ் பேச்சு

சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன். படம் வெளியாகி பல்வேறு விவாதங்களை எழுப்பியதோடு, வசூலிலும் வெற்றி பெற்றது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமூக நீதி என்ற போர்வையில் சாதி வேறுபாட்டை பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது.

திரையரங்குகளில் வெற்றி பெற்ற இப்படம், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகி இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு, மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக இந்த படத்தில் வாழ்ந்திருந்தார். பகத் பாசில், ரத்னவேலு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் மக்களுக்காக போராடும் இளைஞர்களின் வேடத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களைப் பெற்றது. இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு, உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது மாமன்னன். அது மட்டுமன்றி, நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங்கிள் உள்ள ஒரே இந்தியப் படமும், தமிழ் படமும் ‘மாமன்னன்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Mathagam web series: அதர்வா, மணிகண்டன் நடிப்பில் மத்தகம் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியீடு!!

இந்த நிலையில், படத்தின் 50வது நாள் வெற்றி விழா இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த விழா மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “மாமன்னன் திரைப்படம் எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று என்னால் அதை இசையால் பண்ண முடியவில்லை. அதனால் அதை யார் செய்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து விட்டேன். வடிவேலுவின் ஒரு காட்சி பார்த்த பின்புதான் இந்த படத்தை மிகச் சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “நான் நன்றாக நடிக்க காரணம் இப்படிப்பட்ட இயக்குநர்கள் இருப்பதால்தான். முன்பு எல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடுவது பெரிதாக இருந்தது. தற்போது 50 நாள் ஒரு படம் ஓடுவது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. படத்தில் வடிவேலு மலையில் நின்று அழுவதுதான் என்னுடைய ஃபேவரட் சீன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என கூறினார்.

மேலும், இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:சினிமா சிதறல்கள்: தங்க நாணயம் வழங்கிய படக்குழு..இந்தியன் 2 படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாட்டம்..விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ'!

Last Updated : Aug 17, 2023, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details