தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.10 கோடி நஷ்ட ஈடு; பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்! - இசைப்புயல் ரஹ்மான் ரூ 10 கோடி

AR Rahman notice to surgeons association: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு, அவர் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:17 PM IST

சென்னை:கடந்த 2018ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மாநாட்டிற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும்; ஆனால், அரசு அனுமதி வழங்காததால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட 29.50 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டபோது, முன் தேதியிட்ட காசோலையை ரஹ்மான் வழங்கியும், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ரஹ்மான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இது சம்பந்தமாக ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத், பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், 'இசைத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சமூகத்தில் பல தளங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார் என்றும், அவரைப் பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் நற்பெயருக்கு கலங்கம்:'அசிக்கான் அமைப்புடன் ரஹ்மான் எவ்விதத்திலும் தொடர்பிலோ? ஒப்பந்தத்திலோ? இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார். தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுவதாகவும், மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்: ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களில் திரும்பப்பெற வேண்டும் என்றும், பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்' என்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மேரி கிறிஸ்துமஸ் vs யோதா ரிலீஸ் மோதல்: கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி நடிக்கும் படம் முன்கூட்டியே வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details