தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மாதிரிப் பள்ளிகளில் திறன் அறிவு தேர்வு ரத்து; தமிழ்நாட்டில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உயர் கல்வி! - chennai district news

தமிழ்நாட்டில் மாணவர்களின் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உயர் கல்வி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 7, 2023, 8:52 PM IST

Updated : Mar 7, 2023, 8:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயணிக்கும் மாணவர்களில் ஆர்வமும் திறமையும் உடைய மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும்; தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீட்டித்து தொடர் கவனிப்பு மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. நுழைவுத் தேர்வு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் செம்மை பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்திற்கும் திறமைக்கேற்ப உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை பள்ளி கல்வித்துறை தொடர்ந்து வழங்கும் எனவும் அதில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அறிவு தேர்வு நடத்தப்படும் என பிப்ரவரி 28ஆம் தேதி மாதிரி பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த அறிக்கையில் மார்ச் 4ஆம் தேதி 10:30 மணி முதல் 12 மணி வரை நடத்தப்படும் எனவும்; ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி இருந்தார்.

அரசின் பள்ளியில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வுநடத்துவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அரசு பள்ளிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டதற்கு, 'நுழைவுத் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரியில் இடம் பெறுவதை இலக்காக கொண்டு நான் முதல்வன், செம்மை பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பள்ளி மாணவரும் உயர் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு கல்லூரி சிற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை சாத்தியமாக இருந்த ஐஐடி, ஜேஇஇ, CLAT தேசிய சட்டப் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு ஆர்வமும் திறமையும் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளில் படித்த சுமார் 4000 மாணவர்கள் பள்ளி கல்வித்துறை கொடுத்த ஊக்கமும் பயிற்சியின் காரணமாக தேர்வு எழுதினர். அதில் வெற்றியும் பெற்று பல நூறு மாணவர்கள் அடுத்த நிலைக்குத் தேர்வாகியுள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் ஆர்வமும் திறமையும் உடைய மாணவர்களை தொடர்ச்சியாக படிக்க வைக்கவும்; தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர்கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீடித்த தொடர் கண்காணிப்பும் வழிகாட்டுதல் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு நடத்த திட்டமிடப்பட்டது.

இது மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது, அந்த நிலைப்பாட்டில் தற்பொழுதும் எவ்வித மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து வழங்கும்' என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரை-2க்கு போட்டியாக இணையத்தில் ட்ரெண்டான வட சென்னை-2





Last Updated : Mar 7, 2023, 8:59 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details