தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.13.64 கோடி மதிப்பில் உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்களைத் திறந்துவைத்த முதலமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

13.64 கோடி மதிப்பில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டடங்கள் திறப்பு:முதலமைச்சர்
13.64 கோடி மதிப்பில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டடங்கள் திறப்பு:முதலமைச்சர்

By

Published : Nov 2, 2022, 5:14 PM IST

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.13.64 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத்திறந்து வைத்தார்.

இன்று (2.11.2022) தலைமைச்செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 13 கோடியே 64 லட்சத்து 16ஆயிரம் ரூபாய் செலவில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மூன்று கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நாகப்பட்டினம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றைத்திறந்து வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டு பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக்கட்டடங்கள் கட்டுதல் போன்ற திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

2022-2023ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கையில், கள்ளர் சீரமைப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்கிடச்செய்ய, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளில் உண்டு உறைவிடப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை மாவட்டம், செக்கானூரணி, அரசு கள்ளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரம், அரசு கள்ளர் (இருபாலர்) மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 கோடியே 17 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் செலவில் மூன்று உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், அய்யனார்குளம் மற்றும் கீரிப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 5 கோடியே 66 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், கழிவறைகள் ஆகிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் 3 கோடியே 13 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம் மற்றும் தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரையில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதிக்கட்டடம் என மொத்தம் 13 கோடியே 64 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:"நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம்"- ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details