சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால், மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. தற்பொழுது தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற மாணவர்களைத்தேர்வு செய்து வருகின்றனர். எனவே பொறியியல் பட்டங்களைப்படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் வகையில் தொழிற்சாலைகளுடன் இணைந்து புதியப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடத்திட்டதிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழு கூட்டத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் ஆலோசனை செய்து அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் குழுக்கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் மாணவர்களுக்கு தொழிற்சாலைக்குத்தேவைக்கு ஏற்ற பயிற்சி கொடுக்கப்படவில்லை. அதனை கொடுப்பதற்காக இந்த பாடத்திட்டத்தில் தொழில்துறை வல்லுநர்களின் கருத்துகளைப்பெற்று, அவர்கள் கூறுவது போல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அவர்கள் தொழிற்சாலைக்குத்தேவையான திறனை பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பினை முடிக்கும்போதே பெற்றவர்களாக இருப்பார்கள்.
புதிய பாடத்திட்டத்தில் 5 பருவத்தில் இருந்து படிக்கும்போதே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 8ஆவது பருவத்தில் மாணவர்கள் தொழிற்சாலையில் இருந்து பயிற்சி பெறுவதற்கான முறையை செய்துள்ளோம். 3 மற்றும் 4ஆவது பருவத்தில் அடிப்படை பாடங்கள் தான் கற்பிக்கப்பட உள்ளன.