தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 20 மாவட்ட கல்வி அலுவலர்களுக்குப் பணி ஒதுக்கீடு - chennai latest news

பள்ளிக்கல்வித்துறையால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

20 நேரடி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
20 நேரடி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

By

Published : Jul 15, 2021, 10:50 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நேரடியாக தேர்வுச் செய்யப்பட்ட 20 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிடங்களை ஒடுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு 20 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 15) வழங்கினார்.

அதன்படி ,

திருநெல்வேலி - சீர்லின் விமல்

ஈரோடு - மான்விழி

சென்னை தெற்கு மாவட்டம் - பிரேமலதா

செங்கல்பட்டு - மோகனா

காஞ்சிபுரம் - சந்தோஷ்

சேலம் - ராஜூ

விழுப்புரம் - கெளசீர்

ஆவடி - நளினி

தஞ்சாவூர் - பேபி

நாமக்கல் - ஜோதிமணி

திருப்பத்தூர் - தயாளன்

ராணிப்பேட்டை - அரவிந்தன்

திருவண்ணாமலை - சுகப்பிரியா

தூத்துகுடி - சங்கீதா சின்ன ராணி

கிருஷ்ணகிரி - முனிராஜ்

தேனி - பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ்

அரியலூர் - கார்த்திகேயன்

வேலூர் - சவுந்தரராஜன்

தர்மபுரி - திருநாவுக்கரசு

திண்டிவனம் - புனிதா அந்தோணியம்மாள் ஆகியோர் மாவட்டக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலின் வாகனம் முன்பு அமர்ந்து போராடிய நபரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details