தமிழ்நாட்டில் ஏழு அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையி்ல், தேவையான அளவு கல்வியியல் கல்லூரி பணிக்கு தகுதி பெற்ற ஆசிரியர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து பணியிட மாற்றம் செய்ய உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் கல்வியியல் கல்லூரியில் காலியாக உள்ள முதல்வர் பணியிடத்தில் இரண்டு பேராசிரியர்களும், 16 பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து வேறு கல்வியில் கல்லூரிக்கும் பணியிட மாற்றம் செய்து உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார். காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளையும் கல்லூரி கல்வி இயக்குனரகம் விரைந்து செய்துவருகிறது.
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிவித்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெறுவதற்கு உயர் கல்வித்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!