சென்னை:இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், 'தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி அக்டோபர் 31ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
இதனைத்தாெடர்ந்து பணியிடத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநராகப்பணியாற்றி வரும் நாகராஜமுருகன் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு புதிய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்' என அதில் கூறப்பட்டுள்ளது.