தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் நாளை (மே 6) முதல் மே 20ஆம் தேதிவரை ஊரடங்கில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளது. இதனால் தமிழ்நாட்டை 9 மண்டலங்களாகப் பிரித்து 9 காவல் துறை அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் மே 7ஆம் தேதி அன்று மாலையே மாவட்ட ஆட்சியர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்றைக் கண்காணிக்க ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் அளவிலான அலுவலர்களைக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களை 9 மண்டலங்களாகப் பிரித்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் பின்வருமாறு:
1 சென்னை மண்டலம் குழு-1 சென்னை நகரம்-எச்.எம்.ஜெயராம், ஐஜி - காத்திருப்போர் பட்டியல். குழு- 2 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு- சாரங்கன், ஐஜி - காவல் பயிற்சி.
2. வேலூர் மண்டலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை- வனிதா ஐபிஎஸ், ஐஜிபி ரயில்வே சென்னை.
3. விழுப்புரம் மண்டலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி - பாண்டியன், விழுப்புரம் சரக டிஐஜி.