அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021 ம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் 4-12-2020 முதல் 10-12-2020 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.