தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - law university llb application

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு நாளை (செப். 30) முதல் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Apply for a 3 year law degree
Apply for a 3 year law degree

By

Published : Sep 29, 2020, 11:31 PM IST

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. ஹானர்ஸ் சட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் நாளைமுதல் வழங்கப்படும்.

அதேபோல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுகலை எல்.எல்.எம். சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 7ஆம் தேதிமுதல் விநியோகிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.tndalu.ac.in என்கிற இணையதள பக்கத்திலிருந்தும், அந்தந்த சட்டக்கல்லூரிகள் மூலமாகவும் வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 28ஆம் தேதிமுதல் நவம்பர் 4ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக - சிவசேனா மூத்த தலைவர்கள் ரகசிய சந்திப்பு !

ABOUT THE AUTHOR

...view details