தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம் - etv bharat

தமிழ்நாட்டில் பி.எட் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்
பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

By

Published : Sep 12, 2021, 4:40 PM IST

சென்னை:இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 7 அரசுக் கல்வியியல் மற்றும் 14 அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் (பி.எட்) முதலாமாண்டில் சேர மாணவர்கள் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் www.tngasaedu.in, www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்காக அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு கட்டணமாக 500 ரூபாய் செலுத்தப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை வரிசைப்படி பதிவு செய்ய வேண்டும்.

பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

மேலும் www.tngasaedu.in, www.tngasaedu.org என்ற இணையதள முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள் 044-28271911 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொடர்புக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு care@tngasaedu,org என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

உதவி மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டி மற்றும் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details