தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டான்செட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!

முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டான்செட் நுழைவு தேர்வு
டான்செட் நுழைவு தேர்வு

By

Published : Feb 1, 2023, 1:49 PM IST

சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு (டான்செட்2023) ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

மேலும் முதல்முறையாக முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போதே, கலந்தாய்விற்கும் சேர்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அண்ணா பல்கலைக் கழக பொதுநுழைவுத்தேர்வு செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விற்கு (டான்செட்2023) பிப்ரவரி 1 ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் CEETA, எம்.இ , எம்.டெக், எம்.ஆர்க்,எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1,500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும். இதே இணையதள முகவரியில் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் நுழைவுகள் குறித்து தகவல்களை இணையதளம் முகவரியில் தொடர்ந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details