தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TANUVAS counselling 2023: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சேர ஆகஸ்ட் 19 முதல் விண்ணப்பம்! - Cutoff marks

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர ஆகஸ்ட் 19 முதல் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS counselling 2023
TANUVAS counselling 2023

By

Published : Aug 19, 2023, 10:19 AM IST

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு , தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளன.

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பிடெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் உள்ளன.

இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18 ஆயிரத்து 752 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3 ஆயிரத்து 783 மாணவர்களும் என 22 ஆயிரத்து 535 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதற்கான தரவரிசைப்பட்டியல் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வு குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், "2023-24ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கு 16ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல், பி.டெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு மற்றும் பால்வள தொழில்நுட்ப இடங்களுக்கும் நடைபெற்ற கலந்தாய்விற்கு 140 பேர் அழைக்கப்பட்டு, 69 பேர் பங்கேற்றனர். அதில் 36 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் இளநிலை கால்நடை மருத்துவப்படிப்பிற்கு 118 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில், 68 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 41 மாணவர்கள் இடங்களை தேர்வுச் செய்தனர்.

அதேபோல் பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்புத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பப் படிப்பிற்கு 59 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதில், 9 மாணவர்கள் பங்கேற்று, 4 இடங்களை தேர்வுச் செய்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 45 மாணவர்கள் இடங்களை தேர்வுச் செய்துள்ளனர்.

பி.டெக் பட்டப்பில் உள்ள உணவுத் தொழில்நுட்பம், கோழியின வளர்ப்பு தொழில்நுட்பம், பால்வளத்தொழில் நுட்பம் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்க 1476 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 185 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 78 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு - (கலையியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவு) சேர்க்கைக்கு இணையதளத்தில் வெளியிட்டுள்ள வரையறுக்கப்பட்ட மதிப்பெண் (Cutoff marks) அடிப்படையில் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் பதியலாம்.

அதில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சேர்க்கை கடிதத்தை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் சேர வேண்டும்" என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காணாமல் போன 500 மீனவ கிராமங்கள்..! விற்றுவிட்டீர்களா என திருமுருகன் காந்தி ஆவேசம்..

ABOUT THE AUTHOR

...view details